×

என்.எல்.சி நிறுவனத்துகாக கையகப்படுத்தபட்ட நிலத்தில் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: என்.எல்.சி நிறுவனத்துகாக கையகப்படுத்தபட்ட நிலத்தில் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. என்.எல்.சி விரிவாக்க விவகராம் தொடர்பாக விவசாயி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணியின் போது வாய்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதபடுத்தபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாகுபடி செய்யபட்ட பயிர்களை அறுவடை செய்யும் வரை, விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என அந்த மனுவில் கூறபட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றம் இடைகால உத்தரவு பிறபித்திருந்தது. மேலும் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடபட்டது. தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், தற்ப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி நிறுவனத்துகாக கையகப்படுத்தபட்ட நிலத்தில், அறுவடையை முடித்த பிறகு, நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

The post என்.எல்.சி நிறுவனத்துகாக கையகப்படுத்தபட்ட நிலத்தில் புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : N.N. ,iCord ,CDC ,Dinakaran ,
× RELATED திருத்தணி நெமிலியில் ஏரிக்கரை...