×

ஹரியானா மாநிலம் குருகிராமில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து 144 தடையை நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் கலவரத்திற்கு பின் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை நீக்கி அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர்.இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நுாஹ் மாவட்டத்தை ஊர்வலம் அடைந்தபோது, ஒரு கும்பல், ஊர்வலத்தின் மீது கல்வீசி தக்குதல் நடத்தினர். கலவரக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரண்டு போலீசார், பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த தொண்டர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். குருகிராமில் நான்கு வாகனங்கள் மற்றும் ஒரு கடை தீக்கிரையாகின.

இதனையடுத்து ஹரியானாவில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து நுாஹ், பரிதாபாத் மற்றும் பல்வால், குருகிராம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளன. ஹரியானா முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தற்போது கலவரம் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை நீக்கி அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post ஹரியானா மாநிலம் குருகிராமில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து 144 தடையை நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gurugram ,Haryana District Collector ,Gurugram, Haryana ,Gurugram, ,Haryana ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை...