×

நீலகிரியில் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை கோலக்கம்பை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இதேபோல் உதகையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டத் தொழில் செய்யும் வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளது.

இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்தது. 2016ல் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 2 வடமாநில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக வழக்கு தொடரப்பட்டது. புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் அப்புசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 வடமாநில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2 வழக்கில் தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு தலா 21 ஆண்டு சிறை தண்டனை விதித்த உதகை மகளிர் நீதிமன்றம், ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.3 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilgiris ,Utagai Kolkampai ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...