×

சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு. சண்முகம் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான திரு. ஆலப்பாக்கம் கு. சண்முகம் சண்முகம் அவர்கள் அவர்கள் இன்று (7-8-2023) கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன்.

மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர். கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,councilor ,Chennai Corporation ,Alapakkam K.Shanmugam. ,Chennai ,M.K.Stalin ,146th Ward Councilor ,Alapakkam ,K.Shanmugam. ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...