×

5 மடங்கு வளர்ச்சியை கண்ட ராகுலின் யூடியூப் சேனல்: 2023 ஆகஸ்ட்டில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 26 லட்சமாக உயர்வு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யூடியூப் சேனல் 5 மடங்கு வளர்ச்சியை கண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் ராகுல் காந்தியின் யூடியூப் சேனல் 6 விடியோக்களை வெளியிட்டுள்ளது. இதில் ஜூலை மாதம் அவர் மணிப்பூருக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் தொடர்பான 12 நிமிட வீடியோவும் அடங்கும். இவற்றில் 2 விடியோக்கள் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளன. ராகுல் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி யூடியூப்பில் சேர்ந்தார். அதற்கு 8 நாட்களுக்கு பிறகு பள்ளி மாணவர்களுடன் உரையாடிய முதல் விடியோவை பதிவேற்றம் செய்தார்.

அந்த 6 நிமிட வீடியோ 24 ஆயிரம் பார்வைகளை மட்டுமே இருந்தது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் ராகுல் வழிநடத்திய 4 ஆயிரம் கிலோ மீட்டர் ஒற்றுமை நடைபயணம் நடைபெற்ற 2022-க்கு பிறகு சேனலின் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்து தற்போது 26 லட்சமாக அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. குறிப்பாக செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 2023 இடையே 8.2 லட்சம் புதிய பார்வையாளர்கள் ராகுல் காந்தியின் யூடியூப் சேனலுக்கு கிடைத்துள்ளனர். பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரை மேலும் 10 லட்சம் பார்வையாளர்கள் இணைந்து இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post 5 மடங்கு வளர்ச்சியை கண்ட ராகுலின் யூடியூப் சேனல்: 2023 ஆகஸ்ட்டில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 26 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Rahul ,YouTube ,Delhi ,Congress ,president ,Rahul Gandhi ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...