×

தாய்லாந்தில் பார்வையாளர்களை குதூகலப்படுத்திய எருமை பந்தய திருவிழா; ஜோடி எருமை மாடுகளுடன் துள்ளிக் குதித்து பாய்ந்த விவசாயிகள்..!!

தாய்லாந்து: தாய்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய எருமை பந்தய திருவிழா பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளை போன்று தாய்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் எருமை பந்தய திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தின் நெல் நடவுப்பணி தொடக்கத்தின் போது நடைபெற்ற எருமை பந்தய திருவிழாவில் சேறு நிரம்பி இருக்கும் வயல் பகுதிகளில் எருமைகள் ஏர் கலப்பையில் பூட்டி பந்தயம் நடத்தினர்.

பின்னர் போட்டி தொடங்கியதும் ஜோடி எருமை மாடுகள் துள்ளி குதித்து பாய்ந்த காட்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. விவசாயிகளும் சேர்ந்து ஓடும் எருமை பந்தய போட்டி நடத்துவதால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தாய்லாந்து மக்கள் மத்தியில் உண்டு.

The post தாய்லாந்தில் பார்வையாளர்களை குதூகலப்படுத்திய எருமை பந்தய திருவிழா; ஜோடி எருமை மாடுகளுடன் துள்ளிக் குதித்து பாய்ந்த விவசாயிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Thailand ,racing ,Jallikattu ,Rekla ,Manjuvirattu ,Tamil Nadu ,Buffalo racing ,
× RELATED கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித்...