×

மாநாடு நடக்கும் இடத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

வாழப்பாடி, ஆக. 7: வாழப்பாடி அருகே, திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞர் அணி மாநாடு நடத்தப்படும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம். செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, ஆறுமுகம், முத்துலிங்கம், சேகர், சீனிவாசன், அன்பு (எ) மருதமுத்து, மூர்த்தி, சிவராமன், செழியன், வெங்கடேசன், பாபு (எ) வெங்கடேஸ்வரன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநாடு நடக்கும் இடத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Vazhapadi ,KN Nehru ,DMK youth team conference ,Vazhappadi ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்