×

வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி,ஆக.7:தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முனியராஜ் (எ) அம்பர்லா (28). மீனவர். திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (எ) குட்டியன் (19). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.இதன் காரணமாக சங்கர் (எ) குட்டியன் கடந்த 4ம் தேதியன்று முனியராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தவறாக பேசி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் (எ) குட்டியனை கைது செய்தனர்.

The post வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Rajendran ,Muniyaraj (A) Ambarla ,Tsunami Colony ,Chiluwaipatti, Tuticorin ,Fisherman ,Threspuram ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...