×

திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரம் தரையில் துணியை விரித்து கிரிவலம் வந்த பக்தர்கள்: பாதம் படாமல் வினோத வழிபாடு

திருவண்ணாமலை, ஆக.7: திருவண்ணாமலையில் தரையில் துணியை விரித்து அதன்மீது நடந்து 14 கி.மீட்டர் தூரம் பாதம் படாமல் இருக்க வினோதமான முறையில் கிரிவலம் சென்று 3 பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை நினைக்க முக்தித்தரும் ஆன்மிக நகராகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் அண்ணாமலையார் கோயிலை வழிபட்டு இறைவன் திருவடிவாக அமைந்திருக்கும் தீபமலையை கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அதன்படி நடந்தும், அங்கப்பிதட்சணமாகவும், அடி பிரதட்சணமாகவும் என பல வகையில் கிரவலம் சென்று வழிபடுகின்றனர். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு நடன கலைஞர், பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீட்டர் தூரம் கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அகத்தியர் ஆசிரமத்தில் தங்கியுள்ள 2 பெண்கள் உள்பட 3 பக்தர்கள் நேற்று வினோதமான முறையில் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதன்படி, காட்டன் துணியை கிரிவலப்பாதையில் விரித்து அதன்மீது நடந்து கிரிவலம் சென்றனர். பின்னால் வருபவர் துணியை எடுத்து கொடுக்க முன்னால் செல்பவர் அதை தரையில் விரித்தபடி 14 கி.மீட்டர் தூரமும் நடந்து சென்றனர்.

இதுகுறித்து, கிரிவலம் சென்ற பக்தர்கள் கூறியதாவது:
திருவண்ணாமலையில் உள்ள அகத்தியர் ஆசிரத்தில் தங்கி சேவை செய்து வருகிறோம். நாங்கள் மூவரும் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள். திருவண்ணாமலையில் அடிக்கொரு லிங்கம் அமைந்திருக்கிறது. எனவே, தரையில் நம்முடைய பாதம் படாமல் கிரிவலம் செல்ல வேண்டும் என விரும்பி தரையில் துணியை விரித்து அதன்மீது நடந்து கிரிவலம் செல்கிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்து கிரிவலம் தொடங்கினோம். தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் இதுபோல கிரிவலம் செல்கிறோம். ஆடி மாதத்துக்குள் இந்த கிரிவலத்ைத முடித்து விடுவோம். அதைத்தொடர்ந்து, 108 நாட்களும் வெவ்வேறு விதமான கிரிவலம் செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

The post திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரம் தரையில் துணியை விரித்து கிரிவலம் வந்த பக்தர்கள்: பாதம் படாமல் வினோத வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thiruvanamalaya ,Tiruvandamalai ,A.7 ,Thiruvandamalai ,Thiruvanamalayan ,grivalam ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி...