×

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, ஆக.7: திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கும் லால்சலாம் திரைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குகிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிகை நிரோஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லால்சலாம் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் செஞ்சி பகுதிகளில் நடந்தது. இந்நிலையில், லால்சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. எனவே, அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த அவர், வைகுந்த வாயில் பகுதியில் நின்று தீபமலையை தரிசனம் செய்தார். லால்சலாம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோயிலில் தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்சன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.

The post அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Aishwarya Rajinikanth Swami ,Anamalayar Temple ,Thiruvandamalai ,Aiswarya Rajinikanth Swami ,Analayar ,Rajinikanth ,Aishwarya Rajinikanth Swami Vizhan ,
× RELATED அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தியம்...