×

வடமாநிலத்தவர் 28 பேருக்கு வேலை? என்எல்சி நிர்வாகம் திடீர் விளக்கம்

 

நெய்வேலி, ஆக. 7: வடமாநிலத்தவர் 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டதா? என்பது குறித்து என்எல்சி நிர்வாகம் திடீர் விளக்கம் அளித்துள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், 862 பேர் கொண்ட நிலம் மற்றும் குடியிருப்பு வீடு கொடுத்தவர்கள் பட்டியலில், 28 பேருக்கு 1992 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் தவறாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக, மின்னணு ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வரிசை எண்கள் 835 முதல் 862 வரையிலான பெயர்களைக் கொண்ட அந்த 28 நபர்களுக்கு ராஜஸ்தானில் உள்ள என்எல்சி பர்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தைக் கருத்தில் கொண்டு, என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் வேலை வழங்கப்பட்டது என்று என்எல்சி இந்தியா தெளிவுபடுத்துகிறது.

என்எல்சி இந்தியா ஒரு இந்தியா அளவிலான நிறுவனமாக இருப்பதைக் கருத்தில் கொள்ளாமலும், உண்மை நிலையை தவறாகக் கருதி, தொடர்பில்லாத நபர்களுக்கு, நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் என்எல்சி இந்தியா நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்கியதாகவும், பொது மக்களிடையே நிறுவனத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கத்தில், தவறான செய்தியைப் பரப்பியிருக்கக்கூடும் என தோன்றுகிறது.

மேலும், என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்து வரும் தற்போதைய பதற்றமான சூழலை மோசமாக்குவதற்காகவும் இந்த தகவல் பரப்பப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தும் நோக்கில், மேற்குறிப்பிட்ட நிலம் வழங்கிய நபர்கள் 28 பேர் பற்றிய முழுமையான விபரங்கள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள என்எல்சி பர்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் பணியமர்த்திய விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு என்எல்சி நிர்வாகம், தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

The post வடமாநிலத்தவர் 28 பேருக்கு வேலை? என்எல்சி நிர்வாகம் திடீர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : NLC ,Neyveli ,Dinakaran ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...