×

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 30 பயணிகள் பலி, 100 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ராவல்பிண்டியின் அபோதாபாத் நகருக்கு ஹசாரா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இது நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சர்ஹாரி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

100 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த, படுகாயமடைந்த நபர்களின் விவரங்கள் சேகரிப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 30 பயணிகள் பலி, 100 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Karachi ,Sindh ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...