ஐதராபாத்: புகழ் பெற்ற ‘மக்கள் பாடகர்’ கத்தார்(77) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். 1949ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஐதராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மடி விட்டல் ராவ்(77) . இளம் வயதில் மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 1980 காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் பல்வேறு பொதுக்கூட்டங்களில் புரட்சி பாடல்களை பாடி வந்தார். தனி தெலங்கானா மாநிலத்துக்கு தொடர் ஆதரவு தெரிவித்து வந்த கத்தார், புரட்சிகர பாடல்கள் மூலம் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்து வந்த கத்தார் ‘மக்கள் பாடகர்’ என்று புகழ் பெற்றார்.
கடந்த சில தினங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஜுலை 20ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கத்தாருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிறுநீரக கோளாறு, நுரையீரல் தொற்று, வயது மூப்பு காரணங்களால் கத்தார் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post ‘மக்கள் பாடகர்’ கத்தார் மறைவு appeared first on Dinakaran.