×

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

பானிஹால்: ஒரு நாள் இடைவெளிக்கு பின் அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் துவங்கியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் 62 நாள் புனித யாத்திரை நடக்கும். கடந்த ஜூலை 1ம் தேதி புனித யாத்திரை துவங்கி நடைபெற்று வந்த நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டையொட்டி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை யாத்திரை துவங்கிய நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கீலா மோர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து யாத்திரை சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. நேற்று 1626 பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். இதுவரை 4.17 லட்சம் பக்தர்கள் புனித யாத்திரை சென்று வந்துள்ளனர்.

The post அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Amarnath Yatra ,Banihal ,Amarnath Cave ,Jammu and ,Kashmir… ,Dinakaran ,
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்