×

இன்று 5ம் ஆண்டு நினைவு தினம் கலைஞர் நினைவை போற்றுவோம்: மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் அறிக்கை

சென்னை: ‘மாற்று திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அள்ளித்தந்த கலைஞரை, அவரது நினைவு நாளில் போற்றுவோம்’ என்று மாற்று திறனாளிகள் சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: முத்தமிழறிஞர் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் மாற்று திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

கலைஞர் ஆட்சி காலத்தில் உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றம் செய்து மகுடம் சூட்டி மகிழ்ந்தார். மேலும் அவர்களுக்கு தனித்துறையும், தனி நலவாரியம் அமைத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களில் மாற்று திறனாளிகள் துணைவியாருடன் சென்று வர பஸ் கட்டண சலுகை, கல்வி உதவித் தொகை 2 மடங்கு, விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு கட்டணம் 2 மடங்கு உயர்த்தி வழங்கினார். கலைஞர் எப்படி செயலாற்றினாரோ, அதே போல முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு எண்ணற்ற வரலாற்று திட்டங்களை வாரி வழங்கி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று 5ம் ஆண்டு நினைவு தினம் கலைஞர் நினைவை போற்றுவோம்: மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : President of the ,Association of Persons with Disabilities ,Chennai ,
× RELATED தீர்மானிக்கப்பட்டதா பிரதமர்...