×

தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக

டெல்லி: குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோருகிறது. மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமையவுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது.

மோடி 2.0-வின் கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் அமைச்சரவை மற்றும் 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோருகிறது.

 

The post தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக appeared first on Dinakaran.

Tags : BJP ,President of the Republic ,Delhi ,National Democratic Alliance ,President of the ,Republic ,
× RELATED குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக..!!