×

தஞ்சை அதிராம்பட்டினத்தில் 150 மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்: மீனவர்கள் அவதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக நேற்று அதிகாலை 5 மணியளவில் துறைமுகத்துக்கு வந்தனர். அப்போது துறைமுக வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தண்ணீரில்லாமல் தரை தட்டி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இங்கு எக்காலத்திலும் 5 அடி ஆழத்துக்கு குறையாமல் தண்ணீர் இருக்கும். ஆனால் நேற்று தண்ணீரில்லாமல் இருந்தது. இதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடு திரும்பினர். இப்பகுதியில் 10 மீட்டர் தூரம் வரை தான் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் நேற்று 150 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி இருந்தது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தை முதல் சித்திரை மாதம் வரை 10 மீட்டர் வரை தான் கடல் உள்வாங்கும். ஆனால் தற்போது 150 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளது. கஜா புயல் தாக்குதலால் துறைமுக வாய்க்கால் தூர்ந்து விட்டது. கடல் உள்வாங்கும் நேரத்தில் துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் மீன் பிடிக்கச்செல்ல முடியாமல் தவிக்கிறோம். எனவே துறைமுக வாய்க்காலை தூர்வார வேண்டும் என்றனர். ஏற்கனவே கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பி வந்த போது கடல் உள்வாங்கியிருந்ததால் துறைமுகப்பகுதியில் சேற்றில் படகுகள் சிக்கியது. அதனை கயிறு கட்டி இழுத்து வந்தனர்.

The post தஞ்சை அதிராம்பட்டினத்தில் 150 மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்: மீனவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thanjavur Athirampatnam ,Fishermen ,Awadi ,Thanjavur ,Athirampatnam ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு;...