×

மாமல்லபுரம் அருகே வேம்புலியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எச்சூர் கிராமத்தில் புகழ்பெற்ற வேம்புலியம்மன், பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு வேம்புலியம்மன், பிடாரி செல்லியம்மன் கோயிலில் நேற்றிரவு தீ மிதி திருவிழா நடந்தது. நேற்று மாலை கோயில் குளக்கரையில் வேம்புலியம்மன், பிடாரி செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க, ஏராளமான பக்தர்கள் அம்மனுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் காப்பு கட்டி விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயிலின் முன்பு பிரமாண்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் பூக்கரகத்துடன் தீ மிதித்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

The post மாமல்லபுரம் அருகே வேம்புலியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Fire Mithi Festival ,Vempuliyamman Temple ,Mamallapuram ,Vempuliyamman ,Pitari Chelliyamman temple ,Thee Mithi festival ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்