×

ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!..

மசினகுடி: ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி மற்றும் முதுமலை, டாப்சிலிப் முகாம்களை சார்ந்த 37 யானை பாகன்களை சந்திக்கிறார். மசினகுடியியல் இருந்து முதுமலைக்கு செல்லும் முர்மு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிக்கிறார் என தெரியவந்துள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் சுற்றுப்பயணமாக இன்றைய தினம் தமிழகம் வந்தடைந்துள்ளார்.

இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக தமிழக மாநிலத்தில் இருக்கக்கூடிய மைசூர் வந்தடைந்த அவர் தற்போது அங்கு இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுத்திக்கு வந்தடைந்துள்ளார். இங்கு இருந்து இன்னும் சற்று நேரத்தில் முதுமலை வளர்ப்பு யானை முகாமுக்கு புறப்பட்டு செல்லும் அவர், அங்கு உள்ள வளர்ப்பு யானைகளை பார்வையிடுவதற்கு மட்டுமின்றி இரண்டு யானைகளுக்கு உணவு அளிக்கின்றார்.

அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருது கதாநாயகனான தம்பதியினரை சந்தித்த பின்னர் அங்கு இருக்கக்கூடிய அரங்கில் முதுமலை வளர்ப்பு யானை முகாமில் பணியாற்றக்கூடிய 27 பாகன்கள் மற்றும் அதேபோல டாப்ஸ்லிப் வளர்ப்பு யானை முகாமில் பணியாற்றக்கூடிய 10 யானை பாகன்களை ஆகிய 37 யானை பாகன்களை அவர் கலந்துரையாட இருக்கின்றார்.

குறிப்பாக மூத்த யானை பாகன்களரான திருமுருகன், முருகேஷ், சுரேஷ் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கோரிக்கை மற்றும் யானை வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி குறித்து கேட்டு அறியவுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடிக்கு சாலை மார்கமாக திரும்பிவரும் குடியரசு தலைவர் அங்கு இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மைசூருக்கு சென்று மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு செல்லவிருக்கிறார்.

The post ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!.. appeared first on Dinakaran.

Tags : Mazinakudi ,President ,Fluvupati Murmu ,MASINGUDY ,Pomman ,Belle ,Mutumalai ,Tapsiliph ,State ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்