×

அதிமுக-வினர் கூட்டணியை பாதிக்கும் எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன் வேண்டுகோள்

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்துக்கு பதில் கருத்து சொல்லி கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த விரும்பவில்லை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்துப் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை பொறுத்தவரை பாஜகவின் மாநில தலைவர். ஜஸ்ட் லைக் அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித் ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். எனப் பேசியிருந்தார் செல்லூர் ராஜூ.

இது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பேசிய அண்ணாமலை, யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது. மேலும் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என பதில் கொடுத்தார். இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதிமுகவினர் கூட்டணியை பாதிக்கும் வகையில் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதனால் கூட்டணியை பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதிமுக தலைவர்களின் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட வேண்டாம். பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல அதிமுக-வினர் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக தலைவர்கள் கூட்டணியை பாதிக்கும் எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பது நல்லது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post அதிமுக-வினர் கூட்டணியை பாதிக்கும் எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Sainivasan ,Govai ,minister ,PA ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!