×

வலையப்பட்டியில் இன்று மின்தடை

 

திருவில்லிபுத்தூர், ஆக.5: திருவில்லிபுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட வலையப்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய கோட்ட பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவில்லிபுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட வலையபட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வலையபட்டி ஏரியா, குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார்நத்தம், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மங்களம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வலையப்பட்டியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Thiruwilliputtur ,A.5 ,Vilapatti Sub-Power Station ,Thiruwilliputtur Fort ,Resistor ,
× RELATED சிவகாசி – திருவில்லிபுத்தூர்...