×

சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதிபலிப்பான் குச்சி வழங்கல்

புதுக்கோட்டை, ஆக.5: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரதிபலிப்பான் குச்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் ராஜா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இப்ராஹிம் பாபு, பொருளாளர் பிரசாத், துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதிபலிப்பான் குச்சி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,padayatra ,Pudukottai ,Road Safety Awareness Association ,Thiruvapur Muthumariamman ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை