- நகராட்சி நிர்வாகம்
- நீர் வழங்கல் திணைக்களம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை
- தின மலர்
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 451 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தலைமைச்செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சியில் 227 பேருக்கும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 84 பேருக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் 10 பேருக்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 பேருக்கும் என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணா மூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் கருணை அடிப்படையில் 451 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
