×

கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : இந்து சமய அறநிலலயத்துறை  சார்பில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை  இன்று  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி  வைத்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 04.09.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்  தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  அதன் தொடர்ச்சியாக சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  B.Com, BBA, BCA, B.Sc. Computer Science  ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் கல்லூரி தொடங்கிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை 06.10.2021 வெளியிட்டது .நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில், அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான  சுமார் 5 ஏக்கர் நில பரப்பில் கல்லூரி தொடங்கிட உத்தேசிக்கப்பட்டதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டிலே அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் சென்னை கொளத்தூர்  எஸ்.ஜே அவின்யூவில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக நடத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கல்லூரியில் மாணவ, மாணவியர்  சேர்க்கைக்கான அறிவிப்பு 08.10.2021 அன்று வெளியிடப்பட்டது. 31.11.2021 வரை 193 மாணவ, மாணவியர்கள் சேர்க்கை முடிக்கப்பட்டுள்ளது.இக்கல்லூரியில் 7 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகம், 1 நூலகம், கல்லூரி முதல்வர் நிர்வாக அறை பேராசிரியர் பணியாளர்கள் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான 11 உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 18.10.2021 அன்று நடத்தப்பட்டது. பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவி பேராசிரியர் நேர்முக தேர்வுக்கு வல்லூநர் குழு அமைக்கப்பட்டு  கலந்து கொண்ட 284  விண்ணப்பதாரர்களின்  தகுதிகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை 22.10.2021 அன்று முதலமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து 02.11.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி  வைக்கப்பட்டுள்ளது…

The post கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Arulmiku Kabaleeswarar College of Arts and Science at ,Kolathur ,Chennai ,Department of Hindu Religious Charities ,Arulmiku Kabaleeswarar Arts and Science College ,Kolathur, Tamil Nadu ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு