×

உத்தரகாண்ட் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 12 பேர் பலி?

ருத்ரபிரயாக்: உத்தகாண்டில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 12 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் கவுரிகுண்ட் நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்து மூன்று கடைகளை அடித்துச் சென்றன. மேலும் அப்பகுதியில் வசித்து வந்த 12 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக கவுரிகுண்ட் பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எப்) வீரர்கள், தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாயமான 12 பேர் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை. அவர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. கனமழை மற்றும் மலைப்பகுதியில் இருந்து உருண்டு விழுந்த பாறாங்கற்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாயமானவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த சிலரும் அடங்கும்’ என்றனர்.

The post உத்தரகாண்ட் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 12 பேர் பலி? appeared first on Dinakaran.

Tags : Utterkhand ,Rudriprayak ,Uttarakhand ,Kedarnath ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ