×

‘பாப்டா’ விருது பெற்ற இசையமைப்பாளர் மரணம்

லண்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த கார்ல் டேவிஸ் (86), கடந்த 1961ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வந்தார். புகழ்பெற்ற இசைக் கலைஞரான கார்ல் டேவிஸ், 1981ம் ஆண்டு வெளியான ‘தி ஃப்ரெஞ்ச் லெப்டினன்ட்ஸ் வுமன்’ படத்திற்காக ‘பாப்டா’ மற்றும் நோவெல்லோ விருதை வென்றார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட கார்ல் டேவிஸ், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்தார்.

அவருக்கு நடிகையும், மனைவியுமான ஜீன் போட், இரண்டு மகள்கள் உள்ளனர். இதுகுறித்து கார்ல் டேவிஸ் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் கார்ல் டேவிஸ் காலமானார். அவரது வியக்கத்தக்க இசையால் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘பாப்டா’ விருது பெற்ற இசையமைப்பாளர் மரணம் appeared first on Dinakaran.

Tags : London ,Carl Davis ,New York City, USA ,England ,
× RELATED உலக கோப்பையில் விளையாட இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட்டனர்