×

தும்பிக்கை இல்லாமல் உலாவரும் யானை குட்டியை கேரள வனத்துறை பொறுப்பேற்று வளர்க்க கோரிக்கை..!!

திருவனந்தபுரம் : கேரளா வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாத குட்டியானை ஒன்று சுற்றி திரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரப்பள்ளி ஏழாட்டு முகம் வனப்பகுதியில் 4வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக உலா வருகிறது. தும்பிக்கை இல்லாமல் யானை கூட்டத்தில் சுற்றிவரும் அந்த குட்டி உடல்மெலிந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தும்பிக்கை இல்லாததால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம் போல் உண்ணமுடியவில்லை என்றும் இதனால் சோர்வாக காணப்படலாம் என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த குட்டியணைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தும்பிக்கை இல்லாமல் நம்பிக்கையுடன் சுற்றித்திரியும் யானை குட்டியை அப்பகுதி மக்கள் வினோதமாக பார்த்து செல்கின்றனர்.

The post தும்பிக்கை இல்லாமல் உலாவரும் யானை குட்டியை கேரள வனத்துறை பொறுப்பேற்று வளர்க்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala forest department ,Thiruvananthapuram ,Kerala forest ,Athirapalli ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...