×

தென்காசியில் அடவிநயினார்கோவில், கருப்பாநதி, ராமநதி, நீர்த்தேக்கங்களில் நீர் திறக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு..!!

சென்னை: தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், கடனா நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் அரசபத்து, வடகுறுவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் 9923.22 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 03.11.2021 முதல் 30.03.2022 வரை 148 நாட்களுக்கு,  நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 க.அடி வீதம், 1653.87 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு  ஆணையிட்டுள்ளது.இதனையடுத்து, அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால்,  நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் பெறும் மொத்தம்  7643.15 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு அடவிநயினார்கோயில் நீர்த்தேக்கத்திலிருந்து 03.11.2021 முதல் 30.03.2022 வரை148 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு வினாடிக்கு 100 க.அடி வீதம், 955.39 மி.க அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட  அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், கருப்பாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் மொத்தம் 9514.70 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 03.11.2021 முதல் 30.03.2022 வரை 148 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25க.அடி வீதம் 1189.34 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட  அரசு ஆணையிட்டுள்ளது.தென்காசி மாவட்டத்திலுள்ள இராமநதி நீர்த்தேக்கத்தின் கீழ்பாசனம் பெறும் வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால்ஆகியவற்றின் கீழ் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் பெறும் 4943.51 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து  03.11.2021 முதல் 30.03.2022 வரை 148 நாட்களுக்கு,  நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 க.அடி வீதம், 823.91 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட  அரசு ஆணையிட்டுள்ளது….

The post தென்காசியில் அடவிநயினார்கோவில், கருப்பாநதி, ராமநதி, நீர்த்தேக்கங்களில் நீர் திறக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Adavinayanar ,Karupanadi ,Ramanadi ,Tenkasi ,Chennai ,Tenkasi District ,Tenkasi Circle ,Arasapattu ,Vadakuruvapathukal ,Alwarkurichi Tenkal ,Ambur ,Kadana Reservoir ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...