×

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதேபோல் தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமான சில தினங்களை, முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என வகைப்படுத்தி அது செயல்படுத்தப்படும் விதம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்வர் தலைமையில் ஏற்கனவே 5 கட்டங்களாக ஆய்வு கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் இன்று ( ஆகஸ்ட் 4) மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அரசின் திட்டங்கள், அதன் செயல்பாடுகள், தாமதத்திற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் , புதிய திட்டங்கள் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி, தா.மோ.அன்பரசன் பங்கேற்றுள்ளனர். மேலும் அமைச்சர்கள் பெரிய கருப்பன், கயல்விழி செல்வராஜ், உதயநிதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

The post முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,C. G.K. ,Stalin ,Chennai ,Municipality ,Chennai Leadership Secretariat ,G.K. Stalin ,Djagar ,B.C. ,G.K. ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...