×

செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலக செஸ் ஜாம்பவான்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்கு முன்னேறியுள்ள, வீரர் குகேஷுக்கு என் வாழ்த்துகள்; திறமையும், உறுதியும்தான் உங்களை மிக சிறந்த வீரராக உயர்த்தியுள்ளது; உங்களின் இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்ததுடன், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது!” எனத் தெரிவித்துள்ளார்.

The post செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chess ,Chief Minister ,Kukkeshis ,G.K. ,Stalin ,Chennai ,Grandmaster ,Kukesh ,Chief Minister of State ,G.K. Stalin ,B.C. ,
× RELATED பயோனியர் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி