×

மதுரையில் ஐடி தொழில் துவங்குவதாக கூறி ரூ.1.19 கோடி மோசடி: பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு

 

மதுரை, ஆக. 4:மதுரை அழகர்கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிந்து உமாதேவி. இவரது கணவர் மருதுபாண்டி. இவர்கள், ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த தனபாலன் கேப்லினை (65) கடந்த 2019ல் அணுகி தகவல் தொழில் நுட்பத்துறையில் தொழில் துவங்க இருப்பதாகவும், அதில் பணம் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதனை நம்பிய தனபாலன் கேப்லின், தன் பங்கு தொகையாக ரூ.1.19 கோடியை சிந்து உமாதேவியிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்று கொண்டவர், தொழில் துவங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் தனபாலன் கேப்லின் கொடுத்த பணத்தை கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் தரவில்லை. தொழிலில் முதலீடு செய்த லாபத்தையும் தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த தனபாலன் கேப்லின், இதுகுறித்து மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து, சிந்துஉமாதேவி, மருதுபாண்டி, ராமன், தேனிமொழி, பிரசன்ன பாலமுருகன் ஆகியோர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மதுரையில் ஐடி தொழில் துவங்குவதாக கூறி ரூ.1.19 கோடி மோசடி: பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sindhu Umadevi ,Madurai Alagharkoil Main Road ,Maruthupandi ,Gnanolivupurathi ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை