×

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்

புதுக்கோட்டை, ஆக.4: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இந்த கோயிலின் கும்பாபிஷேக்தையொட்டி திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த திருப்பணிகள் உபயதாரர்களின் உதவியுடன் சுமார் ரூ.6 கோடி செலவில் திருப்பணிகளை முடித்து ஒரு ஆண்டு காலத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் விழா குழுவை சேர்ந்த சம்பத்குமார், டாக்டர்.ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Thirukokarnam ,Pragatambal Temple Kumbabhishek Tirupani ,Pudukottai Thirukokarnam Pragatambal Temple ,Kumbabhishek ,Tirukokarnam Pragatambal Temple Kumbabhishek Tirupani Inauguration ,
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...