×

மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீயில் கருகி 2 பசுக்கள் பலி அதிகாரிகள் ஆய்வு ஊசூர் அருகே அடுப்பில் இருந்து பரவியது

அணைக்கட்டு, ஆக.4: ஊசூர் அருகே அடுப்பில் இருந்து பரவிய தீயால் மாட்டு கொட்டகை எரிந்து 2 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த தெள்ளூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கமல். இவரது மனைவி தேவி. இவர்கள் வீட்டின் முன்பு அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மாட்டு கொட்டகை அமைத்து அதில் 2 பசு மாடுகள், ஒரு கன்று குட்டியை கட்டி வைத்து வளர்த்து வந்தனர். மேலும் இந்த கொட்டகையில் மாடுகளுக்கான மாட்டு தீவனம், வைக்கோல் உள்ளிட்டவைகளை அடக்கி வைத்திருந்தனர். இந்த கொட்டகைக்கு பக்கத்தில் விறகு அடுப்பு உள்ளது. இந்த அடுப்பிலிருந்து வெண்ணீர் காய வைப்பது, மாட்டிற்கு தேவையான கஞ்சி காய்ச்சுவது உள்ளிட்டவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை மாட்டு கொட்டகையின் அருகில் உள்ள விறகு அடுப்பு மூலம் மாட்டிற்கு கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்து தீ பரவி மாட்டு கொட்டகையில் பட்டு தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ெதாடங்கியது. இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த மீட்டர் பாக்ஸ், மீன் ஓயர்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சேதமானது, மேலும் மாட்டு கொட்டகையில் இருந்த 2 பசுமாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதைப் பார்த்த கமலின் குடும்பத்தினர் கதறி அழுனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த கிராம விஏஓ அசோக், அரியூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கால்நடைத்துறையினரும் அங்கு வந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், வருவாய், கால்நடை துறை சார்பில் மாடுகள் தீயில் எரிந்து உயிரிழந்ததால் அதன் உரிமையாளருக்கு இழப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

The post மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீயில் கருகி 2 பசுக்கள் பலி அதிகாரிகள் ஆய்வு ஊசூர் அருகே அடுப்பில் இருந்து பரவியது appeared first on Dinakaran.

Tags : Usur ,Damkatu ,Dinakaran ,
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...