×

ஜேடர்பாளையம் காவிரியில் குவிந்த மக்கள்

பரமத்திவேலூர், ஆக.4: ஆடி 18, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், சொலசிராமணி உள்ளிட்ட காவிரி கரையோரப்பபகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி, புதுமண தம்பதிகள் தாலி பிரித்துக்கட்டுதல், கன்னிமார் பூஜை செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையில் ஆடி 18, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் கூடி புனித நீராடி முன்னோர்களுக்கு பழ வகைகள் வைத்து படையல் இட்டு வழிபாடு செய்தனர்.

புதுமண தம்பதிகள் திருமண மாலையை காவிரி ஆற்றல் விட்டு, தாலி பிரித்துக்கட்டியும், திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி கன்னிமார் பூஜைகள் செய்தும் சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கு மஞ்சள் நூலை கைகளில் கட்டி வழிபாடு செய்தனர். மேலும் ஆண்டு முழுவதும் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி விட்டு காவிரி அன்னையை வணங்கினர். கொரோனா மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து இருந்த நிலையில், தற்போது ஆடிப்பெருக்கு விழா வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதேபோல் ஜேடர்பாளையம், சோளசிராமனி உள்ளிட்ட பகுதிகளிலும் வழிபாடு நடத்தினர்.

The post ஜேடர்பாளையம் காவிரியில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Jaderpalayam ,Paramathivellur ,Aadi 18, ,Aadiperu festival ,Paramathivelur ,Jedarpalayam ,Solasiramani ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...