×

நேமம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: நேமம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா, குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும், காவல் துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் டிஎஸ்பிகள் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கஞ்சா, குட்கா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுதுள்ளது.

இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை பூந்தமல்லி சுகாதார அலகு சார்பில் நேமம் கிராமத்தை புகையிலை இல்லா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேமம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் பிரதீபா, துணைத் தலைவர் விஜயா ரமேஷ், 5வது வார்டு உறுப்பினர் முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பேரணியில் கலந்து கொண்டு நேமம் கிராமத்தை புகையிலை இல்லாத கிராமம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post நேமம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Nemam panchayat ,Tiruvallur ,Thiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...