×

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

புழல்: மனைவி இறந்த துக்கத்தில், கணவன் தற்கொலை செய்து கொண்டார்.செங்குன்றம் அருகே தண்டல்கழனி, வடிவுடையம்மன் நகர், பட்டுக்கோட்டை அழகிரி தெருவை சேர்ந்தவர் அமிர்தகுமார்(23). தனியார் ஊழியர். இவரது மனைவி நிவேதா(20). இவர்கள் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது நிவேதா நிறைமாத கர்ப்பிணி எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 30ம் தேதி இத்தம்பதிக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது.

அன்றைய தினம் விடுமுறை போடும்படி மனைவி நிவேதா கூறியுள்ளார். எனினும், வேலை காரணமாக வீட்டில் இருக்காமல் அமிர்தகுமார் வெளியே கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.இதனால், கடும் மனஉளைச்சலில் இருந்த நிவேதா, அன்று மாலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே நிவேதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, நிவேதாவின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தனது ஆசை கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் அமிர்தகுமார் நேற்று முன்தினம் நள்ளிரவு படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அமிர்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செங்குன்றம் அருகே அடுத்தடுத்த நாட்களில் கர்ப்பிணி மனைவியும் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Thandalkalani ,Senkunram ,Vadudayamman Nagar ,Pattukottai Alagiri Street ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் பகுதியில் பழுதடைந்த...