×

பத்திரப்பதிவு ஆபீஸ்களில் ரெய்டு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பைபாஸ் சாலையில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும். இந்த அலுவலகங்களில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று ஆடி பெருக்கு என்பதால் 2வது அலுவலகத்தில் வழக்கத்தை விட 120க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி மாலை முதல் இரவு வரை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

The post பத்திரப்பதிவு ஆபீஸ்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Rayd ,Karaikudi ,Sivagangai District ,Second-Registry Office ,Karaikudi Bypass Road ,District Registrar Office ,Raidu ,Dinakaran ,
× RELATED அணைவதற்கு முன் விளக்கு...