×

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 223 இடங்கள்

கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 223 எக்சிக்யூடிவ் இன்ஜினியர் பணியிடங்களுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Engineer. மொத்த இடங்கள்: 223.
பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: (மெக்கானிக்கல்- 94, எலக்ட்ரிக்கல்-57, சிவில்- 26, கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்-13, கெமிக்கல் இன்ஜினியரிங்- 9, சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்- 6, மைனிங் இன்ஜினியரிங்-18).
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம்.
சம்பளம்: ரூ.70,000-2,00,000. வயது: 1.6.2023 தேதியின்படி 36க்குள்.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ஓபிசி யினருக்கு ₹800/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.8.2023.

 

The post நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 223 இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Naiveli Coal Company ,Cuddalore District ,Neyveli Coal Company ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!