×

திருப்பூர் பகுதிகளில் வாடகை செலுத்தாத 22 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

திருப்பூர், ஆக. 3: திருப்பூர் பகுதிகளில் ரூ.10.17 கோடி வாடகை செலுத்தாத 22 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. நிர்வாக வசதிக்காக இந்த 60 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்கள் உள்ளன. இதுபோல் பல இடங்களில் மாநகராட்சி சார்பில் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாயும் கிடைத்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமாக 438 கடைகள் உள்ளன.இந்த கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் மாநகராட்சிக்கு உரிய வாடகை செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் கடை உரிமையாளர்கள் இதன் பின்னரும் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் வாடகை செலுத்தாத கடைகள் குறித்து மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி பாரதிநகர் காம்ப்ளக்ஸ், ஜெய்வாபாய் பள்ளி அருகே என்பது உள்பட மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள 169 கடைகள் கடைகள் ரூ.10.30 கோடி வரி வாடகை செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் வரி செலுத்தாத 22 கடைகளுக்கு சீல் வைத்தனர். மற்றவர்களுக்கு வாடகையை விரைவில் செலுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாடகை செலுத்தினால் மீண்டும் கடைகளில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பூர் பகுதிகளில் வாடகை செலுத்தாத 22 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...