×

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 15 கோடியில் நவீனமயமாகிறது திருத்தணி ரயில் நிலையம்:  பணிகளை 6ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்  ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு

திருத்தணி, ஆக. 3: திருத்தணி கோவில் நகரமாக உள்ளது. இதற்காக பல மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் நாள்தோறும் ரயில் மூலம் திருத்தணிக்கு வருகை தருகின்றனர். அதேபோன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் வியாபாரிகள் வர்த்தகர்கள் என அனைவரும் ரயில் நிலையத்தை பயன்படுத்தி சென்னை செங்கல்பட்டு மும்பை விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருத்தணி ரயில் நிலையம் வந்து ரயில்களை பிடித்து பயணம் செய்கின்றனர் அதேபோன்று தினமும் நாள்தோறும் சென்னை டு திருத்தணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு லட்சம் பேருக்கு மேல் திருத்தணி ரயில் நிலையம் மூலம் வந்து பயணம் செய்து வருகின்றனர். தற்போது இட நெருக்கடியான பயணிகள் படிக்கட்டுகள் ஏறி இறங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இது குறித்து தினகரன் நாளிதழ் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்கள் ரயில் பயணிகளின் நலன் கஷ்டத்தை குறித்து வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக செய்திகளை வெளியிட்டு வந்தது இந்த செய்திகளின் எதிரொலி காரணமாக திருத்தணி ரயில் நிலையத்தை நவீனமயமாக செய்வதற்கு ஒன்றிய அரசு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது திட்டத்தை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 6ம் தேதி அன்று காலை 9 மணி முதல் ஒரு மணி வரை பாரத பிரதமர் நரேந்திர மோடி அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் பணியை தொடங்கி வைக்கிறார். நான்கு மாத காலத்திற்குள் முடித்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் ரயில் நிலையத்திற்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தற்போது படிக்கட்டுகள் மூலம் பயணிகள் 1வது பிளாட்பாரத்தில் இருந்து இரண்டு மூன்று மற்றும் வெளியேறுவதற்கும் நடை மேம்பாலம் பயன்படுத்தி வருகின்றனர். முதியவர்கள் கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள் என பலரும் அவதிப்பட்டு வந்தனர். இதனை போக்குவதற்காக ரயில் நிலைய பகுதியில் இருந்து ரயில் புறம் காந்தி ரோடு இணைப்பு சாலை வரை 12 மீட்டர் அகலம் கொண்ட நடை மேம்பாலம் மற்றும் எக்ஸ் லெட்டர் வசதி மற்றும் லிப்ட் வசதியுடன் கூடிய நல மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

முகப்பு கோபுர அமைப்பில் மிக உயரமாக கட்டப்பட்டு கோவில் நகரத்தை நினைவூட்டும் வகையில் ரயில் நிலையத்தையும் மறுசீரமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இருப்பதால் பிரின்ஸ்பல் பொறியாளர் குப்தா மற்றும் பொது மேலாளர் விசுவநாதர் ஈரியா மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் நேற்று மாலை திடீரென திருத்தணி ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். அவர்களை திருத்தணி ரயில்வே நிலைய மேலாளர் சீனிவாசலூர் மற்றும் நிலைய ரயில்வே அலுவலர்கள் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தை ஆய்வு செய்துவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி சிலை
திருத்தணியில் பிறந்து இந்தியாவின் உயர் பதவியான ஜனாதிபதி பதவியை வகித்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவர் பெயரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவர் வாழ்ந்த தெருவிற்கு பெயர் சூட்டி திருத்தணி நகரத்தில் கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை கௌரவிக்கும் வகையில் ஒன்றிய அரசு ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் ஒரு பெரிய சிலை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மண்டலத்தில் 15 ரயில் நிலையங்கள்
ஒன்றிய ரயில்வே துறையின் சார்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை தரம் உயர்த்துதல், நவீனமயமாக்கல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 1,275 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தென்னக ரயில்வேயின் சார்பில் தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மண்டலத்தில், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, கிண்டி, மேற்கு மாம்பலம் உள்பட 15 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. ரயில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப அந்தந்த ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதும், இந்நிலையில் சமீபத்தில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த முதல் கட்டமாக ₹25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாதன் எர்ரா தலைமையிலான அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழுவினர் தனி பிரத்யேக ஆய்வு வாகனத்தில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு, பிறகு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

The post அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 15 கோடியில் நவீனமயமாகிறது திருத்தணி ரயில் நிலையம்:  பணிகளை 6ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்  ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruthani railway station ,Tiruthani ,Tiruthani Railway Station ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...