×

மானாம்பதி, குயில்குப்பத்தில் ₹7.50 கோடி மதிப்பீட்டில் 63 இருளர்களுக்கு கான்கிரீட் வீடுகள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருக்கழுக்குன்றம், ஆக. 3: திருக்கழுக்குன்றம் அருகே மானாம்பதி, குயில்குப்பம் கிராமத்தில் சுமார் ₹7.50 கோடி மதிப்பில் 63 இருளர் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திருக்கழுக்குன்றம் அருகே மானாம்பதி, குயில்குப்பம் கிராமத்தில் உள்ள 63 இருளர் குடும்பங்களுக்கு, சுமார் ₹7.50 கோடி மதிப்பில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். முன்னதாக, குயில்குப்பம் கிராமத்தில் உள்ள 63 இருளர் குடும்பங்களுக்கு திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், பிரபல திரையரங்க உரிமையாளரும் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநருமான அபிராமி ராமநாதன், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் பங்கேற்று, 63 இருளர் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் நல்லம்மை ராமநாதன், வெங்கடேசன், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மானாம்பதி, குயில்குப்பத்தில் ₹7.50 கோடி மதிப்பீட்டில் 63 இருளர்களுக்கு கான்கிரீட் வீடுகள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kuilkuppam ,Manampathi ,Udayanidhi Stalin ,Thirukkalukunram ,Thirukkalukkunram ,Manampathi, Quilkuppam ,Irular ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...