×

10ம் தேதி நடக்கிறது ஆதிதிராவிடர், பழங்குடியின பணியாளர் குறைதீர் முகாம்

விருதுநகர், ஆக.3: அரசுத்துறையில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் பணிபுரியும் இடங்களில் உள்ள கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து ஆக.10 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் மனு அளிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களில் இட ஒதுக்கீடு விதிப்படி நியமனம் செய்தல் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றைக் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் நடத்தப்படும் பற்றாளர் கூட்டமானது இம்மாதம் 10ம் தேதியன்று மாலை 4 மணிக்கு கலெக்டர் தலைமையில் விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அரசுத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் பணிபுரியும் இடங்களில் உள்ள கோரிக்கைகள் மற்றும் புகார்கள், தனியார் அல்லது பணியாளர் அமைப்புகளின் முறையீடுகள் ஆகியவற்றையும், நேரடியாக மனுவாக அளித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

The post 10ம் தேதி நடக்கிறது ஆதிதிராவிடர், பழங்குடியின பணியாளர் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Camp ,Virudhunagar ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை