×

புதுவை உட்பட நாடு முழுவதும் 20 போலி பல்கலைகழகங்கள்: யுஜிசி பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: புதுவையில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜூகேஷன் உள்பட நாட்டில் மொத்தம் 20 போலி பல்கலைகழகங்கள் செயல்படுகின்றனஎன்று யுஜிசி எச்சரித்துள்ளது. இதுகுறித்து பல்கலைகழக மானியகுழுவின்(யுஜிசி) செயலாளர் மனிஷ் ஜோஷி கூறுகையில்,‘‘ நாட்டில் உள்ள பல மாநிலங்களில் 20 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.டெல்லியில் மட்டும் அதிகபட்சமாக 8 போலி பல்கலைகழகங்கள் செயல்படுகின்றன. அகில இந்திய பப்ளிக் மற்றும் பிசிக்கல் ஹெல்த் சயின்ஸஸ்,கமர்ஷியல் பல்கலைகழகம் லிட், தார்யாகஞ்ச், யுனைடட் நேசன்ஸ் பல்கலைகழகம்,வொகேஷனல் பல்கலைகழகம், ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிசியல் பல்கலைகழகம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், சுய தொழிலுக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைகழகம்,ஆத்யத்மிக் பல்கலைகழகம்(ஆன்மீக பல்கலைகழகம்) ஆகியவை. உபியில் 4 போலி பல்கலைகள் உள்ளன.

காந்தி இந்தி வித்யாபீத்,எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஓமியோபதி தேசிய பல்கலைகழகம்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைகழகம், பாரதிய சிக்சா பரிஷத். ஆந்திராவில் கிறிஸ்ட் நியூ டெஸ்டமென்ட் நிகர்நிலை பல்கலைகழகம், குண்டூர். பைபிள் திறந்தநிலை பல்கலைகழகம் விசாகப்பட்டினம். மேற்கு வங்கத்தில் இந்திய மாற்று மருத்துவ சிகிச்சைக்கான பல்கலைகழகம், இந்திய மாற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம். கர்நாடகாவில் பதன்கவி சர்க்கார் சர்வதேச திறந்தநிலை பல்கலைகழகம் பெலகாவி. கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைகழகம்,கிஷனட்டம். மகாராஷ்டிராவில் ராஜா அரபிக் பல்கலைகழகம், நாக்பூர். புதுச்சேரி, வழுதாவூர் சாலை திலாஸ்பேட்டையில் உள்ள  போதி அகாடமி ஆப் ஹையர் எஜூகேஷன் ஆகியவை. இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு உள்ளிட்ட எந்த சான்றிதழ் வழங்க அங்கீகாரம் வழங்கப்படவில்லை’’ என்றார்.

The post புதுவை உட்பட நாடு முழுவதும் 20 போலி பல்கலைகழகங்கள்: யுஜிசி பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Pudu ,UGC ,New Delhi ,Sri Bodhi Academy of Higher Education ,Puduvai ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...