×

நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் ஓபிசி உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப் பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போது மத்திய சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

The post நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் ஓபிசி உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Justice ,Rohini ,OBC ,Ramadoss ,Union Govt. ,CHENNAI ,PAMC ,Union government ,Dinakaran ,
× RELATED லாலு மகள் ரோகிணியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி: பிரமாண பத்திரத்தில் தகவல்