×

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மேச்சேரி ஆட்டு சந்தையில் ரூ.3 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு..!!

சேலம்: ஆடி பேருக்கு விழாவை முன்னிட்டு மேச்சேரி ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஆட்டுச் சந்தை கூடுவது வழக்கம். நாளை ஆடிப்பெருக்கு என்பதால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகளை ஆடு வளர்ப்பு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். கடந்த வாரங்களை விட ஆடுகள் வரத்து 2 மடங்காக அதிகரித்ததால் அவற்றின் விற்பனையில் நல்ல விலை கிடைக்கவில்லை.

கடந்த வாரம் 12 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 8 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய ஆடுகள் விற்பனையில் 8 மணிக்கு 3 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து ஆடுகள் வரத்து இருந்ததால் மேலும் விற்பனை களைகட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மேச்சேரி ஆட்டு சந்தையில் ரூ.3 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Adiperku festival ,Mechery Goat Market ,Salem ,Macchery Goat Market ,Adi Festival ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...