×

தகாத உறவால் வீட்டை விட்டு ஓடிப் போன திருமணமான 45 வயது பெண்ணும் 19 வயது வாலிபரும் குத்திக் கொலை

இந்தூர்: தகாத உறவால் வீட்டை விட்டு ஓடிப் போன திருமணமான 45 வயது பெண்ணும், அவரது கள்ளக்காதலனான 19 வயது வாலிபரும் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது சடலங்கள் காட்டிற்குள் மீட்கப்பட்டன.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் அடுத்த சோர்வா பகுதியை சேர்ந்த வஞ்சர் பிலாலா (50) என்பவரின் மனைவி வெஸ்டி தோமர் பிலாலா (45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வீனு பானோக் (19) என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகினர்.

இதுதொடர்பாக வெஸ்டியின் கணவரும், வீனுவின் தாயும் தனித்தனியாக காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில், சந்தர்முலி கிராமத்தின் காட்டுப் பகுதியில் இருவரின் சடலங்கள் கிடந்தன. தகவலறிந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி திலீப் சண்டேல் கூறுகையில், ‘வெஸ்டிலா, வீனுவின் சடலங்கள் அருகருகே கிடந்தன. அவர்கள் இருவரும் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இருவரின் உடலிலும் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இருவருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வெஸ்டியின் கணவர் வஞ்சர் பிலாலா, இந்த கொலையை செய்திருக்க வாய்ப்புள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post தகாத உறவால் வீட்டை விட்டு ஓடிப் போன திருமணமான 45 வயது பெண்ணும் 19 வயது வாலிபரும் குத்திக் கொலை appeared first on Dinakaran.

Tags : Indore ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...