×

போலீஸ் ஜீப்பின் ‘சாவி இல்லை’ என பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களிடம் காவலர் கூறியது போன்ற நிலையில்தான், ஒன்றிய அரசு உள்ளது : ப.சிதம்பரம்!!

சென்னை : மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரென் சிங் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், நிர்வாண ஊர்வலம் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்வைத்தது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிக்க வேண்டிய மாநில காவல்துறை அதை இழந்து விட்டது என்றும் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தகுதியுடன் போலீஸ் இல்லை என்றும் நீதிபதிகள் சாடினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் அரசு குறித்து உச்சநீதிமன்றம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பிரதமர் அலுவலகத்திற்கும், இம்பாலில் உள்ள மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கும் சென்றடைய எவ்வளவு காலம்தான் ஆகும்?மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு, அரசியல் சாசன நெறிமுறைகள் குறித்து சிறிதேனும் புரிதல் இருந்தால், அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!. போலீஸ் ஜீப்பின் ‘சாவி இல்லை’ என பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களிடம் காவலர் கூறியது போன்ற நிலையில்தான், ஒன்றிய அரசு உள்ளது; தனது அரசியல் சாசன கடமை எனும் எஞ்சினை அணைத்துவிட்டு, சாவியை தூக்கி எறிந்துள்ளது ஒன்றிய அரசு!,” எனத் தெரிவித்துள்ளார்.

The post போலீஸ் ஜீப்பின் ‘சாவி இல்லை’ என பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களிடம் காவலர் கூறியது போன்ற நிலையில்தான், ஒன்றிய அரசு உள்ளது : ப.சிதம்பரம்!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai ,Manipur ,Chief Minister ,Brenn Singh ,PP. ,Chidambaram ,Jeep ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...