- ரயில்வே பாதுகாப்புப் படை
- மும்பை
- ஜெய்ப்பூர்
- காவல் காவல் காவல்துறை
- இரயில்வே பாதுகாப்புப் படை காவலர்
- தின மலர்
மும்பை : ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயிலில் யார் யார் சிறுபான்மையினர் என தேடித் சென்று சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு வரும் 7ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் சேத்தன் சிங் பணியில் இருந்துள்ளார். ரயில் மும்பை சென்ட்ரலை அடைய சுமார் 2 மணி நேரமே இருந்த நிலையில், பி5 பெட்டியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று பார்த்த போது, சேத்தன் சிங் தனது உயர் அதிகாரியான உதவி ஆய்வாளர் திக்கார மீனாவைச் சுட்டுக் கொன்றார.
பி5 பெட்டியில் பயணி ஒருவரையும் சுட்டுக் கொன்ற சேத்தன் சிங், அங்கிருந்து 4 பெட்டிகள் கடந்துச் சென்று பி1 பெட்டியில் மற்றொரு பயணியையும் சுட்டுக் கொன்றார். அங்கிருந்து மேலும் 3 பெட்டிகளை கடந்து எஸ்6 பெட்டியில் 3வது நபரையும் சுட்டுக் கொன்றார். அங்க அடையாளங்களை கொண்டு யார் யார் சிறுபான்மையினர் என தேடிச் சென்று சேத்தன் சிங் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பணி தொடர்பாக உயர் அதிகாரிகள் உடன் நடந்த வாக்குவாதம் முற்றி முதல் கொலையை அவர் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கைது செய்யப்பட்ட அவருக்கு வரும் 7ம் தேதி வரை ரயில்வே போலீசாரின் காவல் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது.
The post ரயிலில் யார் யார் சிறுபான்மையினர் என தேடித் சென்று சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 7ம் தேதி வரை போலீஸ் காவல் appeared first on Dinakaran.

