×

நெல்லை கொக்கிரகுளத்தில் இரும்பு கட்டிங் மிஷின் திருடிய தொழிலாளி

நெல்லை, ஆக.2: நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அரசு பூங்கா அமைக்கும் பணியில் தனியார் கான்ட்ராக்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் போதையில் அங்கு வந்த மர்மநபர் திடீரென இரும்பு கம்பிகளை கட்டிங் செய்ய பயன்படுத்தப்படும் மிஷினை திருடிக்கொண்டு செல்ல துவங்கினார். இதனை கண்ட கான்ட்ராக்ட் நிறுவன ஊழியர்கள் அந்த மர்மநபரை விரட்டி சென்று பிடித்து விசாரிக்க துவங்கினர். அப்போது அங்கு ரோந்து வந்த பாளை காவல் நிலைய எஸ்ஐ பழனிமுருகன் மற்றும் போலீசார் மர்மநபரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் பாளை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்லத்துரை (46) என்பதும், இவர் போதையில் செலவிற்காக கட்டிங் மிஷினை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து கட்டிங் மிஷினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும். இதனையடுத்து செல்லத்துரையின் குடும்பத்தினரை பாளை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். மேலும் இன்று 2ம்தேதி) காலை போலீஸ் நிலையத்திற்கு செல்லத் துரையை விசாரணைக்கு அழைத்து வருமாறு தெரிவித்தனர்.

The post நெல்லை கொக்கிரகுளத்தில் இரும்பு கட்டிங் மிஷின் திருடிய தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Nellai Kokrakulam ,Nellai ,Tamiraparani ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...