×

லோயர் பஜார் சாலையில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியல்களால் விபத்து அபாயம் நீடிப்பு

 

ஊட்டி, ஆக. 2: லோயர் பஜார் சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியல்களால் விபத்து அபாயம் நீடிக்கிறது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட கோடப்பமந்து கால்வாயில் அவ்வப்போது பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, கால்வாயின் இரு புறங்களிலும் உள்ள தடுப்பு சுவர்கள் இடிக்கப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கால்வாயில் தூர் வாரும் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, லோயர் பஜார் பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டன. இடிக்கப்பட்ட இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் அங்குள்ள பார்க்கிங் தளத்தில் கொட்டப்பட்டுள்ளன. பல நாட்களாக இந்த கற்குவியல்களை அகற்றப்படாத நிலையில், அப்பகுதியில் விபத்து அபாயம் நீடிக்கிறது. மேலும், வாகனங்கள் நிறுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, லோயர் பஜார் சாலையோரங்களில் உள்ள பார்க்கிங் தளங்களில் கொட்டப்பட்டுள்ள கற்குவியல்களை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறத்தியுள்ளனர்.

The post லோயர் பஜார் சாலையில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியல்களால் விபத்து அபாயம் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Lower Bazar Road ,Ooty ,Kodappamandu ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...